தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்
இன்று தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஜெய்சங்கரின் பிறந்த நாள். (ஜூலை 12, 1938) இவரது இயற்பெயர் சங்கர். இவரது முதற்படமான இரவும் பகலும் (1965) இயக்குனர் ஜோசப் தளியத் இவர் பெயருக்கு முன்னால் ஜெய் சேர்த்து ஜெய்சங்கராக்கினார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன், ஏவிஎம்.ராஜன் என பலரும் நடித்துக் கொண்டிருந்த காலம் அது. அவர்களுக்கிடையில் 150 படத்திற்கு மேல் கதாநாயகர்களாக நடித்தவர்கள் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தான். கத்திச்சண்டை போட்டு வந்த காலத்தில், டுமீல் டுமீல் சத்தங்கள், கோட்சூட், துப்பாக்கி சகிதமாக ஆங்கிலப் பட பாணியில், ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் பின்னிப்பெடலெடுத்தார் ஜெய்சங்கர்.. தனக்கென்று கொடி பிடிக்க ரசிகர்களை சேர்க்கவில்லை. துதிபாட கூட்டம் சேர்க்கவில்லை. ஆனால், திரையுலகிலும் வெளியுலகிலும் ஏராளமான நண்பர்களைச் சம்பாதித்தார். ஜெய்சங்கர் ஏராளமான மக்கள் தொண்டினை விளம்பரமின்றி செய்தவர். இவருக்குப்பின் இவரது மகன் டாக்டர் விஜய் சங்கர் தனது தந்தையின் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி தந்தையின் தொண்டு பணியினை தொடர்ந்து செய்துவருகிறார்.
:
:
:
Comments