குன்றக்குடி அடிகளார் பிறந்த தினம்

 


சமயப் பணியையும் தமிழ்மொழி வளர்ச்சியையும் இரு கண்களாகக் கொண்டு அருந்தொண்டாற்றிய குன்றக்குடி அடிகளார் பிறந்த தினம் இன்று (ஜூலை 11).  மயிலாடுதுறையை அடுத்த நடுத்திட்டு என்ற கிராமத்தில் பிறந்தார் (1925). இவரது இயற்பெயர் அரங்கநாதன்.1945-ல் துறவறம் பூண்டு தருமபுரம் சைவ மடத்தில் துறவியாக இணைந்தார். ‘கந்தசாமித் தம்பிரான்’ என அழைக்கப்பட்டார். சைவ சித்தாந்தங்கள் தொடர்பான அனைத்தையும் பயின்றார். பல்வேறு சமயப் பணிகளுடன் சொற்பொழிவு ஆற்றியும் வந்தார். திருவண்ணாமலை சைவ மடத்தின் ஆதீனப் பொறுப்பு இவரை நாடி வந்தது. அப்போது ‘தெய்வசிகாமணி அருணாச்சல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்ற பெயர் இவருக்கு சூட்டப்பட்டது. 1949-ம் ஆண்டு குன்றக்குடி மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் ‘குன்றக்குடி அடிகளார்’ என்று நேசத்துடன் அழைக்கப்பட்டார். சமயப் பணிகளை மட்டுமல்லாமல் சமூக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கும் சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டார். ஆதி திராவிடர்களை கோவில்களுக்குள் அனுமதித்தார். சமஸ்கிருத வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் வழிபாடு, பூஜைகள் நடத்த வலியுறுத்தினார்,

* இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். 1967-ல் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மணிமொழி, தமிழகம், அருளோசை, மக்கள் சிந்தனை, அறிக அறிவியல் முதலிய இதழ் களையும் நடத்தி வந்தார். திருக்குறள் தொடர்பான இவரது படைப்பு கள், திருக்குறளின் ஆழத்தையும், செறிவையும் பிரதிபலித்தன. ‘திருவள்ளுவர்’, ‘திருவள்ளுவர் காட்டும் அரசியல்’, ‘குறட்செல்வம்’, ‘திருக்குறள் பேசுகிறது’ உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி