தமிழ்நாடு என மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள்


 


சென்னை மாகாணம்- மதராஸ் மாகாணம்- மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்ட இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் ஜூலை 18 (1967). ஆகையால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாளை தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

1 நவம்பர் 1956-இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது. இதன்படி, சென்னை மாநிலத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் நிறுவப்பட்டன. சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூரின் தமிழ் பகுதிகளும் இணைக்கப்பட்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது. சென்னை சென்னை மாநிலத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு 25 அக்டோபர் 2019 அன்று வெளியிட்டது.[1][2] இந்நிலையில் 2021 இல் புதியதாக பொறுபேற்ற மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, சூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்து.

   ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஒரு மாநிலம் உருவான நாளே கொண்டாடப்படவேண்டும். பெயர்  மாற்றம் செய்யப்பட்ட நாள் மாநில நாள் ஆகாது என்பது அவர்களின் வாதம் 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,