இரு நகரங்களின் கதை"
ஜூலை 11, 1859 "இரு நகரங்களின் கதை" என்ற புகழ்பெற்ற ஆங்கில நாவலை சார்லஸ் டிக்கன்ஸ் எழுதி வெளியிட்ட நாள் இன்று. ஆங்கில எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் சார்லஸ் டிக்கன்ஸ். A Tale of Two Cities என்ற இவரது ஆங்கில நாவல் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டாலும், இன்று வரை பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டுள்ளது இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் ஆங்கில மொழி பயில்வோருக்கு இது பாடப் புத்தகமாக உள்ளது பாரீஸ், லண்டன் என்ற இரு நகரங்களுக்கு இடையே கதை பயணிக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற காலகட்டம். முன்னோர்கள் செய்த தவறுகளுக்கு கதாநாயகனைப் பிடித்து, தண்டனை அளிக்கிறது புரட்சிப்படை. தண்டனையில் இருந்து தப்பினாரா, இல்லையா என்பதை சுவாரசியமாகச் சொல்கிறது இந்த நாவல்.
Comments