இரா. நெடுஞ்செழியன் பிறந்த நாள்


 இன்று ஜூலை 11 1920 இரா. நெடுஞ்செழியன் பிறந்த நாள் . இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் "நாவலர்" என்றும் அழைக்கப்படுவார்.தி.மு.க, மக்கள் தி.மு.க மற்றும் அ .தி.மு.க முதலான கட்சிகளில் இருந்துள்ளார் 1967 முதல் 1969 வரை அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.

1969 ஆம் ஆண்டில் அண்ணா மறைந்தபொழுது ஏற்பட்ட பிணக்கால் மு. கருணாநிதியின் அமைச்சரவையில் பங்கேற்காமல் விலகி இருந்தார்.

1971 முதல்1975 வரை மு. கருணாநிதி அமைத்த அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.

1977 முதல்1980 வரை எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தார்.

1980ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவை அமைக்கும் பொழுதெல்லாம் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார்.

அண்ணா இறந்த பொழுது பெப்ரவரி3, 1969 முதல் பெப்ரவரி 10, 1969 காலமும் எம்.ஜி.ஆர் இறந்த பொழுது டிசம்பர் 24, 1987 முதல் ஜனவரி 7, 1988 வரை இடைக்கால முதலமைச்சராகப் பதவி வகித்தார். இவருடைய துணைவியார் விசாலாட்சி நெடுஞ்செழியனும் தம்பி இரா செழியனும் அரசியல்வாதிகள் தான்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,