அப்பல்லோ 11
இன்று ஜூலை 24 1969 – நிலாவில் இறங்கிய அப்பல்லோ 11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பூமிக்கு வெற்றிகாமாக திரும்பி வந்து பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது. அப்பல்லோ 11 என்பது சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது அப்பல்லோ திட்டத்தின் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது ஜூலை 16, 1969இல் 39ஏ ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. ஜூலை 24, 1969ல் இது திரும்பியது. இத்திட்டத்தில் கட்டளை அலுவலராக நீல் ஆம்ஸ்ட்ரோங்கும், கட்டளைக் கூறு விமானியாக மைக்கேல் கொலின்சும், சந்திரக் கூறு விமானியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர். ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த முதல் மனிதராவார். அல்ட்ரின் அவருக்கு அடுத்தவராவார். கொலின்ஸ், நிலவின் மேல் சுற்றுப்பாதையிலேயே இருந்தார்.
Comments