நிலவில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், "
வரலாற்றில் இன்று - 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 இல் நிலவில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், "மனிதனுக்கு இது ஒரு சிறிய காலடி, ஆனால் மனித குலத்திற்கு இது பெரும் படி" என அப்போது குறிப்பிட்டிருந்தார். அப்பல்லோ 11 விண்கலத்தின் தலைவராக இவர் நிலவுக்குச் சென்றார். ஆம்ஸ்ட்ராங்கும், அவரது சகாவான எட்வின் ஆல்ட்ரினும் மூன்று மணி நேரம் நிலவில் உலவினர். நிலவின் மண் மாதிரிகள் சேகரிப்பு, சோதனைகள், மற்றும் படங்கள் எடுத்தல் போன்ற காரியங்களை அவர்கள் நிறைவேற்றினர்
Comments