குரோம்பேட்டை நாகல்கேணியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்த நாள்விழா

 


இன்று குரோம்பேட்டை நாகல்கேணியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் காமராஜரின் வாழ்க்கையை நினைவு கூறும் வகையில் அவரைப் பற்றிய அருமையான தகவல்களை ஆசிரியர்களும் மாணவர்களும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நம் பள்ளி நம் வீடு முன்னாள் மாணவர்கள் சங்கமம் சார்பில்  குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை பள்ளியின்  உடற்க்கல்வி இயக்குனர் மற்றும் குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். தலைமை ஆசிரியர் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

நம் பள்ளி நம் வீடு முன்னாள் மாணவர்கள் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருமான அல்லா பகேஷ் அவர்களும் நம் பள்ளி நம் வீடு முன்னாள் மாணவர்கள் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவருமான விநாயகம் ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டனர்.


---அல்லா பகேஷ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,