தந்தி சேவை முடிவு
160 ஆண்டுகளாக இந்திய மக்களின் இன்ப, துன்பங்களை சுமந்து சென்ற தந்தி சேவை முடிவுக்கு வந்தது. தொலைபேசி, மொபையில் சேவை, வாட்சப், இன்டர்நெட் போன்ற உடனடி தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சிக்குப் பின்னர் தந்தி சேவையின் தேவை அறவே நீங்கப்பெற்றதால் தொலை தொடர்புத்துறை 2013 ஜூலை மாதம் 14ம் தேதி இரவு 9 மணியோடு இச்சேவையை நிறுத்தியது. கடைசி நாளில் வரலாற்று பதிவாக இருக்கட்டும் என்று கருதி ஆயிரக்கணக்கானோர் தங்கள் உறவினர், நண்பர்களுக்கு அன்றைய தினம் வாழ்த்து தந்தி கொடுத்தனர். அதுகாறும் தந்தி துறையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தோலை தொடர்பு துறையின் இதர அலுவலகங்களில் மாற்றுப் பணி அளிக்கப்பட்டது தந்தி சேவை நிறுத்தப்பட்டது குறித்து அதன் இறுதி நாளில் அத்துறையில் 38 ஆண்டுகள் பணிபுரிந்த ஒரு தந்தி ஊழியர் கண்ணீர் வடிக்கிறார்
Comments