கவிஞர் வாலி நினைவு நாள்
: ஜூலை 18 - இன்று புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி நினைவு நாள்
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட 'வாலி' திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்து, திருவரங்கத்தில் வளர்ந்தார். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, 'வாலி' என்ற பெயரைச் சூட்டினான். தன் நண்பர்களின் துணையுடன் 'நேதாஜி' என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார்.
இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.
இவர் திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார் .
மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ
விருது வழங்கப்பட்டது.
வாலி_அவர்களின்_சமூக_அக்கறை :
“ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்…”
இன்றைய மீனவர்கள் வாழ்க்கை வரை இந்த பாடல் பொருந்தத்தான் செய்கிறது.
“மாலை நிலா ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை…”
இந்த பாடலை விட பொதுவுடைமை பேசும் பாடல் வேண்டுமா?
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் – உனக்கு மாலைகள் விழ வேண்டும்”
என தன்னம்பிக்கை ஊட்டும் எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார்
Comments