மாயூரம் வேதநாயகம் பிள்ளை நினைவு தினம்

தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சிக் கவிஞரும், சமூக ர்திருத்தவாதியுமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை நினைவு தினம் இன்று(1889).



* திருச்சி மாவட்டம் குளத்தூரில் (அக்டோபர் 11, 1826) பிறந்தார். தந்தையிடம் கல்வியைத் தொடங்கியவர், தமிழ், ஆங்கிலக் கல்வியை தியாகராச பிள்ளையிடம் பயின்றார். சிறு வயதிலேயே எழுது வதில் ஆர்வமும் ஆற்றலும் கொண்டி ருந்தார். திருமணம், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளில் நகைச்சுவைக் கவிதைகள் எழுதுவார்.


* நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர், பதிவாளராகப் பணியாற்றினார். பின்னர், தரங்கம்பாடியில் முன்சீஃப் பணியில் சேர்ந்தார். மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணி புரிந்ததால், மாயூரம் வேதநாயம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.


* 1805 முதல் 1861 வரையிலான நீதிமன்றத் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக வெளியிட்டார். தீர்ப்புகளை முதலில் மொழிபெயர்த்த பெருமைக்கு உரியவர். சட்ட விதிகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் முதலில் வெளியிட்டார்.


* தமிழ் உரைநடையை வளம் பெறச் செய்த முன்னோடிகளில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். இவரது கட்டுரைகள், பெண் கல்வி, தாய்மொழிப் பற்று, கடவுள் பக்தி, நல்லாட்சி, நீதி நெறிகள் என பல அம்சங்களையும் உள்ளடக்கியவை. இவை தமிழில் கட்டுரை இலக்கிய வளர்ச்சிக்கு முன்னோடியாக அமைந்தன. தமிழ் இலக்கிய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர், மறுமலர்ச்சிக் கவிஞர், சமூக சீர்திருத்தவாதி எனப் போற்றப்படும் வேதநாயகம் பிள்ளை 63 வயதில் (1889) மறைந்தார்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,