-
ஜூலை 28, 1976 இல் சீனாவின் தங்ஷானில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 242,000 பேர் கொல்லப்பட்டனர். தங்ஷானில் சுமார் 85% கட்டிடங்க ள் தரைமட்டமாகின இப்பகுதியில் ஆழமான நிலத்தடி வேலை செய்யும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். தங்ஷானில் தப்பிப்பிழைத்த மக்கள் தங்கள் வீடுகளின் இடிபாடுகளை கையால் தோண்டி, தங்கள் அன்புக்குரியவர்களின் சடலங்களை தெருக்களில் அடுக்கி வைத்தனர். 1976 ஆம் ஆண்டின் டாங்ஷான் பெரும் பூகம்பம் இருபதாம் நூற்றாண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக இருந்தது.
என்றாலும் பத்து ஆண்டு காலத்தில் தங்ஷான் நகரம் மீண்டும் புனரமைத்து கட்டப்பட்டது, இப்போது 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு வசிக்கின்றனர். பேரழிவு நிலநடுக்கத்திலிருந்து விரைவாக மீண்ட தங்ஷான் "சீனாவின் துணிச்சலான நகரம்" என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment