இந்தியாவில் 14 பெரும் தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட நாள்
ஜூலை 19, வரலாற்றில் இன்று. இந்தியாவில் 14 பெரும் தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட நாள் இன்று (1969).
1960களில், இந்திய வங்கித்தொழில்துறை இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு முக்கிய கருவியாக திகழ்ந்தது. அதே நேரத்தில், மிகவும் அதிக அளவில் வேலை வாய்ப்புக்கள் வழங்கும் ஒரு துறையாக வங்கித் துறை உருவெடுக்க, வங்கித்துறையை நாட்டின் முன்னேற்றம் கருதி நாட்டுடமையாக்குவது பற்றி பேச்சுக்கள் எழுந்தன. அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் " வங்கிகளை தேசிய மயம் ஆக்குதல் பற்றிய சிதறிய சிந்தனைகள்" எனும் தலைப்பிலான கருத்துருவில் இந்திய அரசாங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தினார். அந்தக் கருத்துருவானது நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு, அவரது நடவடிக்கை துரிதமாகவும் மற்றும் எதிர்பாராததாகவும் அமைந்தது. இந்திய அரசாங்கம் ஜூலை 19, 1969 நள்ளிரவு முதல் பதினான்கு பெரிய வணிக வங்கிகளை நாட்டுடைமையாக்கும் ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்து அமுல்படுத்தியது. இந்தியாவின் ஒரு தேசியத் தலைவரான ஜெயப்ரகாஷ் நாராயண், அந்த நடவடிக்கையை " அரசியல் விவேகத்தின் திறமையான வீரச்செயல்" என்று வர்ணித்தார். நகர்ப்புறங்களில் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே இயங்கிவந்த வங்கி சேவைகள் கிராமப்புறங்களிலும் விஸ்தரிக்கப்பட்டன. நாடு முழுவதும் 8000 கிளைகள் மட்டுமே கொண்டிருந்த பொதுவுடைமை வங்கி கிளைகள் 80000 ஆக அதிகரித்தன
வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் வந்ததன் காரணமாக ,. இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் அதிகரித்தது
2007-2009 ஆண்டுகளில் நிலவிய உலகளாவிய நிதி நெருக்கடியின்போது மற்றும் அதுபோன்ற பொருளாதார மந்த நிலைகளின் போது இந்தியப் பொருளாதாரம் தாக்குப்பிடிப்பதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உதவின என்று பலரும் போற்றியுள்ளனர். .அரசுடைமையாக்கப்பட்டுள்ள வங்கிகளை மீண்டும் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளில் தற்போதைய மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருகிறது
Comments