#காலமெல்லாம்_காளான்_வாழ்க/ #படம்_தந்த_மொழி

 

#காலமெல்லாம்_காளான்_வாழ்க 🥰

23.07.2022 

🍄

மழைக்கால எறும்புக்கு 

குடை வீசும் 

தொலைதூரத்து இடி 

🐜

சீக்கிரம் உதிர்ந்து போகிறது 

சத்தம் போட்டு 

சுட்ட ஆப்பம் 

🍄

வெள்ளைச்செடி பச்சைநிலம் 

மழை நாளில் 

எல்லாம் மாறித்தான் போகிறது 

⛈️

காளான் குடைக்குள் 

ஒதுங்குகிறது 

மண் பிளந்த புழு 

🍄

நேற்று முளைத்த 

ஒற்றைக்கால் உயிருக்கு

நூறுமடிப்பில் தொப்பியாம்  

⛈️

எந்தப் பக்கமும் 

சாய்வதில்லை 

ஒரு கிளைக் காளான் 

🍄

ஒருநாள் நன்கு 

உறங்க வேண்டும் 

மேகம் செய்த படுக்கையில் 

⛈️

ஒவ்வொரு மழையிலும் 

வந்து உடைகிறது 

முதல் காதல் காளான் 

💔

#அன்புத்தோழி_ஜெயஸ்ரீ ✍️

#படம்_தந்த_மொழி 

PC : Thamizkumaran Umakanth 💐

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,