கியூபா தேசிய கிளர்ச்சி நாள் .

 


ஜூலை 26 கியூபா தேசிய கிளர்ச்சி  நாள் . 1953 ஜூலை 26 ஆம் நாள் க்யூபா புரட்சி தொடங்கியது. ஆம். அன்றுதான் பிடல்காஸ்ட்ரோ தலைமையில் ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் புரட்சிக் குழுவினர் சாந்தியாவோ டி.கியூபாவில் மன்கடா ராணுவ நிலையத்தைப் புயலாகத் தாக்கினார்கள்.

சுமார் 160 பேர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். இத்தாக்குதலில் அங் கேயே ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் ராணுவ சர்வாதிகாரி பாடிஸ்டாவால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இரண்டாம் நிலை தளபதியாக இருந்த அபெல் சாண்டமரியாவும் தூக்கிலிடப் பட்டார். பிடல்காஸ்ட்ரோவும், ரால் காஸ்ட்ரோவும் கொடுஞ்சிறைக்குள் அடைக்கப்பட்டனர். விசாரணையின் போது நீதிமன்றக் கூண்டையே மேடையாக்கி காஸ்ட்ரோ இடிமுழக்கம் செய்தார்.  சர்வாதிகார நீதிமன்றம் காஸ்ட்ரோவுக்கும், ராலுக்கும் முறையே 15 ஆண்டுகள், 13 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை விதித்தது.மன்கடா  தாக்குதலுக்குப் பின்னர்  5 ஆண்டுகள் 5 மாதங்கள் 5 நாட்களில் கியூபப் புரட்சி வென்றது..


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,