புரட்சித் தமிழன்" சத்யராஜின் 44 ஆண்டு கால திரைப்பயணம்

 "புரட்சித் தமிழன்" சத்யராஜின் 

44 ஆண்டு கால திரைப்பயணம் 

(அறிமுகம் : சட்டம் என் கையில் (14/7/1978)ஜூலை 14....

தமிழ்திரையில் புரட்சிக்கு ஒரு தமிழன் வித்திட்ட நாள்..!  


ஆம், சத்யராஜியத்திற்க்கு அடித்தளமிட்ட நாள்...!  

ஜமீன் குடும்பம், தங்க ஊஞ்சல், பஞ்சனை படுக்கை உதறி, 

ஒரு உன்னதத்தமிழன் கலையில் சாதிக்க தலைநகரம் வந்து சந்தித்த துயரம் ஏராளம். 


புரட்சித் தலைவரை புத்தியில் நிறுத்தி, திரை கனவில் கரைந்தவரை, "இதெல்லாம் நமக்கு வேணாம்" என்று அன்னை  நாதாம்பாளின் நாதம் வேறு...

"தாய் சொல்லத்தட்டதே" எனும் பழமொழி தவிடு பொடியாக்கப்பட்டு, "வென்று வருவேன் தாயே" என்று அன்புடன் மறுத்து, முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கு உயிரூட்டி கஷ்டங்களை காலிட்டு, 

"சட்டம் என் கையில்" என்று, 

அரங்கராஜன், சத்யராஜனாக அரிதாரம்பூசி, 

ஏசுவோர், தூற்றுவோர் முகத்திரை கிழித்து தமிழ் திரையில் தன்னை அரியணை ஏற்றிய முதல் நாள்..! 


சிறு சிறு பாத்திரங்களை சுமந்த, அவர் கேரக்டரை நன்கு புரிந்து, "24-மணி நேரமும்" கொண்டாடிய தமிழ்த்திரை, "காக்கிச்சட்டையில்" சிறைபிடித்து தகடு தகடு என்று பேசியதை தரணியெங்கும் ஒலிக்கச்செய்து, எதிர்நாயகனுக்கு, எதிரியே இல்லாமல் கம்பீரமாக உயர்த்தி நிறுத்தியது. 

 

சினிமாவில் அடுத்த அரங்கம் திறக்க "சாவி" கிடைக்க, பாரதிராஜா தந்த "முதல் மரியாதை"யில், முத்திரை பதித்தவருக்கு, இரண்டாம் மரியாதையாக அவர் கொடுத்த "கடலோரக்கவிதைகள்" முழுநாயகனாக முன்னணியில் நிறுத்தியதும், "கை கொடுப்பான் தோழன்", எனும் பழமொழிக்கு ஏற்ப வந்த மணிவண்ணன், மணியான பாத்திரங்களை கொடுத்து மணிமகுடம் சூட்டினார். 

80' 90'-களில், "மக்கள் என் பக்கம்" என பட்டி தொட்டி எல்லாம் புரட்சித் தமிழன் என்று ரசிக உள்ளங்களில் பரவிக்கிடந்தவர், "கட்டப்பா"வாக கடல் கடந்தும் சேர்க்கப்பட்டார். 


இப்போது கலையுலகில் மூன்றாம் சுற்றிலும் முன்னணியில் நகர்ந்து..."எதற்கும் துணிந்தவன்" என்று குணச்சித்திர பாத்திரங்களில் குடும்பங்களை ஆள்கிறார். 


இன்றுடன் 44ம் ஆண்டு...

நமை ஆளும் கலைத்தாயின் தவப்புதல்வன், 

பகுத்தறிவின் பண்பாளன், இன்னும் நமது வழித்தோன்றல்களை ஆள்வார் என்பதே, அசைக்கமுடியா நம்பிக்கை 


சத்யராஜ் Uncle 💝 அவர்களின் படங்களைப் 

பார்த்து வளர்ந்த 80'ஸ் கிட்ஸ், 
ராஜ் குமார் மலேசியா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,