ஆபீஸ்-க்கு வர முடியாது, அதுவும் 5 நாளெல்லாம்
ஆபீஸ்-க்கு வர முடியாது, அதுவும் 5 நாளெல்லாம் ரொம்ப ஓவர்.. ஐடி ஊழியர்கள் பதில்
இந்திய ஐடி நிறுவனங்கள் அடுத்த 5 வருடத்திற்குப் போதுமான வர்த்தகத்தைக் கையில் வைத்திருப்பதால் இந்த ரெசிஷன் ஐடி ஊழியர்களுக்கு எவ்விதமான பிரச்சனை இல்லை என்றாலும், ஐடி நிறுவனங்களுக்குப் பிரச்சனையாக உள்ளது.
இதற்கிடையில் தற்போது கையில் இருக்கும் வர்த்தகத்தை உரிய நேரத்தில் அளிக்க வேண்டும் என்ற காரணத்தால் போட்டி மிகுந்த இந்தச் சந்தையில் ஊழியர்களைத் தக்க வைக்க வேண்டும் என்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த நேரத்தில் ஐடி ஊழியர்கள் மத்தியில் வொர்க் ப்ரம் ஹோம் முடித்துவிட்டு அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுவது குறித்து ஒரு சர்வே எடுக்கப்பட்டு உள்ளது. இந்தச் சர்வே-யில் ஐடி ஊழியர்களின் பதில் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது
கோட்டாக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டீஸ் அமைப்பு ஐடி மற்றும் ஐடீஸ் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் மத்தியில் முக்கியமான ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் பங்குபெற்ற 90 சதவீதம் பேர் அடுத்த 6 மாதத்திற்குள் அலுவலகம் வர முயற்சி செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
வாரத்தில் 5 நாள்
வாரத்தில் 5 நாள்
இதேபோல் கொரோனா-வுக்கு முன்பு போல் வாரத்தில் 5 நாள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் முறைக்கு 1 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே விருப்பம் தெரிவித்துள்ளனர். இது சிறு மற்றும் நடுத்தர ஐடி ஊழியர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. காரணம் பெரு நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடலை பின்பற்ற தயாராகியுள்ளது.
மேலும் கோட்டாக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டீஸ் அமைப்பின் சர்வே-யில் பங்குபெற்ற 42 சதவீதம் பேர் work from home கட் செய்துவிட்டு அலுவலகத்திற்கு அழைத்தால் பணியை ராஜினாமா செய்துவிட்டு வேறு நிறுவனத்திற்கு மாறச் சற்றும் தயங்கமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
பார்ட் டைம் அல்லது ப்ரீலான்சர்
மேலும் கோட்டாக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டீஸ் அமைப்பின் சர்வே-யில் பங்குபெற்ற 42 சதவீதம் பேர் work from home கட் செய்துவிட்டு அலுவலகத்திற்கு அழைத்தால் பணியை ராஜினாமா செய்துவிட்டு வேறு நிறுவனத்திற்கு மாறச் சற்றும் தயங்கமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
பார்ட் டைம் அல்லது ப்ரீலான்சர்
இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றும் போது ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் பார்ட் டைம் அல்லது ப்ரீலான்சர் ஆகப் பிற நிறுவனங்களில் பணியாற்றிக் கூடுதலான வருமானத்தைச் சம்பாதித்து வருகின்றனர். இது வாய்ப்பு அலுவலகம் சென்றால் கிடைக்காது என்பதால் அலுவலகத்திற்கு வர முடியாது என ஐடி ஊழியர்கள் கூறுகின்றனர்.
65 சதவீதம் பேர் வீட்டில் இருந்து கொண்டு வேறு நிறுவனத்தில் பணியாற்றுவது குறித்து 65 சதவீதம் பேருக்கு தெரியும் என்று ஐடி ஊழியர்கள் இந்தச் சர்வேயில் பதில் அளித்துள்ளனர். இதன் மூலம் இந்தக் கூடுதல் ப்ரீலான்சர் வேலை ஐடி நிறுவனங்களுக்கும் தெரியும் என்பது தான் கூடுதல் தகவலாக உள்ளது.
ork from Office நிலை இதுதான்
மேலும் சர்வே-யில் பங்குபெற்றவர்களில் 1 சதவீதத்திற்குக் குறைவானவர்கள் தான் வாரத்தில் 5 நாள் அலுவலகத்திற்கு வர விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், 50 சதவீதம் பேர் தான் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வர தயார் என்றும் அறிவித்துள்ளனர். அப்போ மீதமுள்ள 49 சதவீதம் பேர் அலுவலகத்திற்கு வர முடியாது எனத் திட்டவட்டமாக உள்ளனர்.
COURTESY
COURTESY
தமிழ் குட்ரிட்டன்ஸ்
Comments