சர் தாமஸ் மன்றோ நினைவு நாள்
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாண ஆளுநராக மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட சர் தாமஸ் மன்றோ நினைவு நாள் இன்று - ஜூலை 6, 1827. இங்கிலாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 27.05.1761 அன்று பிறந்தார்
மன்றோ 1820 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருடைய ஆட்சியின் பொழுது மாவட்ட நிர்வாகத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினார். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் ஆட்சியாளருக்கு (மாவட்ட ஆட்சியருக்கு அடிப்படைக் கடமையான வரிவசூல் தவிர), காவல் மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் திறம்பட செயலாற்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதியினை ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல் மாவட்டங்கள், வட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டமும் வட்டாட்சியரின் கீழ் செயல்படுவதோடு வரிவசூலிப்பு மற்றும் வட்டத்தின் நீதித்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் செயல்பாடு சென்னை மாகாணம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது பரவியது.
தாமஸ் மன்றோ இந்தியக் கலாச்சாரத்தினையும். இந்தியர்களின் பழக்க வழக்கங்களையும் ஆக்கபூர்வமான முறையில் அணுகியதோடு அவருடைய நிர்வாகத்தில் ஏராளமான இந்தியர்களுக்கு வாய்ப்பளித்திருந்தார்
மேலும், அவர் சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடையே பேதமின்றி அளவுகடந்த அன்பினை செலுத்தியதோடு அவர் ஏழை மக்களிடம் மிகவும் கருணையோடும் பாசத்தோடும் நடந்து கொண்டார்
சென்னை கவர்னராக அவரது சிறப்பான பணியைக் கருத்தில்கொண்டு அவரை கவர்னர் ஜெனரலாக நியமிப்பதற்கான பரிந்துரை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இருந்தது. தாய்நாடு திரும்பும் முன்பு, தான் பணியாற்றிய கடப்பா மாவட்ட மக்களைப் பார்க்கச் சென்றார். ஆனால், அந்த நேரத்தில் அங்கே பரவி இருந்த காலரா நோய் தாக்கி, 1827, ஜூலை 6-ம் தேதி இறந்துவிட்டார். அவரது உடல் சென்னை ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இருக்கும் செயின்ட் மேரீஸ் சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய நினைவாக சென்னை அண்ணாசாலையில் உருவாக்கப்பட்ட - குதிரையில் அவர் அமர்ந்துள்ளது போன்ற உருவச்சிலை இப்போதும் சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக கம்பீரமாக காட்சியளிக்கிறது
photo by ஈஸ்வர் ஒளிப்படக் காதலன்.
Comments