தமிழ் திரைப்பட இயக்குனர் மறைந்த மகேந்திரன்

 


 

 இன்று புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் மறைந்த மகேந்திரன் பிறந்த நாள் ஜூலை 25. அலெக்ஸாண்டர் என்ற இயற்பெயர் கொண்ட மகேந்திரன் 1939 இளையான்குடியில் பிறந்தவர்.

சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார் இயக்குனர் மகேந்திரன். ரஜினிகாந்தின் காளி, விஜயகாந்தின் கள்ளழகர் உள்பட 26 படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

அதன்பின் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் ஜானி, கைக கொடுக்கும் கை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற சிறுகதையை தழுவி உதிரிப்பூக்கள் என்ற மிகச்சிறந்த படத்தை எடுத்தார். நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு,மெட்டி உள்பட 12 திரைப்படங்களை மகேந்திரன் இயக்கியுள்ளார். 2006ல் அரவிந்த்சாமி, கவுதமி, நடித்த “சாசனம்” என்ற படம்தான் அவர் இயக்கிய கடைசி திரைப்படம். “தெறி”, “பேட்ட”, “நிமிர்” போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,