இந்தி நடிகர் திலீப் குமார் நினைவு நாள்

 


ஜூலை 7 இன்று புகழ்பெற்ற இந்தி நடிகர் திலீப் குமார் நினைவு நாள் (1922 - 2021). இவர் பிறந்த ஊர் பாகிஸ்தானிலுள்ள பெஷாவர். இவருடைய இயற் பெயர்முகம்மது யூசுப் கான் அவருடைய குடும்பத்தார் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகருக்கு  குடிபெயர்ந்தனர்.  திரையுலகில் இவரது நெருங்கிய சகாவான நடிகர் ராஜ் கபூர் இவரது இவரது இளமைக்கால நண்பனாவார்.  திலீப் குமார், 1944 ஆம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தவர். சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் திலீப் குமார்."முகல் ஈ ஆசம்" படம் மூலம் பிரபலமான திலீப்குமார் ஏராளமான படங்களில் ஹீரோவாகவும் பின்னர் குணசித்திர வேடங் களிலும் நடித்துள்ளார். சோகமான கதாபாத்திரங் களில் அதிகம் நடித்ததால் இவரை டிராஜடி கிங் என்று இந்தி ரசிகர்கள் அழைத்தனர் இவர் இந்தி நடிகை சயிரா பானுவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இணைபிரியாத தம்பதிக ளாக இருவரும் வாழ்ந்து வந்தனர்.தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ள இவர், மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்ற நடிகர் என்கிற பெருமை இவருக்கு உண்டு. மேலும் அதிக பட்ச விருதுகளை வாங்கிய நடிகர் என, கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  திலீப் குமார் பெரும் நன்கொடையாளர். பல தொண்டு நிறுவனங்களுக்கு ஏராளமாக நன்கொடைகளை அளித்துள்ளார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,