ஒரு நூற்றாண்டை நிறைவு செய்த தோழர் என்.சங்கரய்யா
இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாகிய தலைவர்களில் ஒருவருமான ஒரு நூற்றாண்டை நிறைவு செய்த தோழர் என்.சங்கரய்யா அவர்களின் 101 ஆவது பிறந்த நாள் இன்று - ஜூலை 15 , 1922
75 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் மாணவராக, கட்சித்தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, விவசாய சங்க மாநில, அகில இந்திய தலைவராக சங்கரய்யா ஆற்றியுள்ள பணிகள் போற்றுதற்குரியன
8 வருஷம் ஜெயில்.. 5 வருஷம் தலைமறைவு வாழ்க்கை என பல தியாகங்களை தன்னகத்தே கொண்டவர்... எத்தனையோ அடக்குமுறைகளின் தடியடிக்கு ஆளானவர்.. எத்தனையோ இன்னல்களுக்கு உள்ளானவர்.. இவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்தாலே, மொத்த இளைஞர் கூட்டத்துக்கும் நரம்புகள் புடைக்குமாம்.. அந்த அளவுக்கு நெருப்பு வார்த்தைகளை கக்கி அனலடிக்க செய்வார்.. மிகச்சிறந்த இலக்கியவாதியும்கூட.. ஜனசக்தி, தீக்கதிர் போன்றவற்றின் ஆசிரியராக இருந்தவர்!
தொழிலாளர் நலன்களில் அக்கறை காட்டியவர்.. உழைக்கும் வர்க்கத்தின்மீது ஓயாமல் பாசத்தை காட்டியவர்.. எந்த மேடை ஏறினாலும், சாதி மறுப்புத் திருமணங்களை பற்றிதான் அதிகமாக பேசுவார்.. "குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்பு வரலாம்.. விரோதம் வரும்... ஆனாலும் சாதி மதம் பார்க்காமல் உங்கள் வீட்டு பெண்களுக்கு திருமணம் செய்து வையுங்கள்" என்று ஓயாமல் வலியுறுத்தி கொண்டே இருந்தவர்...
"வரலாறு என்பதே வர்க்க போராட்டங்களின் தொகுப்புதான்" என்கிறார் மார்க்ஸ்.. அப்படி ஒரு வரலாறைதான் என்.சங்கரய்யாவும் வாழ்ந்து வருகிறார்.. இந்திய துணை கண்டத்தில், மார்க்சிய இயக்கம் மகத்துவம் பெறும் என்றால், அது சங்கரய்யா போன்ற தோழர்களின், ரத்தத்தாலும், சதையாலும், நாடி நரம்பாலும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆடம்பரமும், பதவி ஆசையும், லஞ்சமும், ஊழலும் பரவிக்கிடக்கும் இன்றைய அரசியல் சூழலில் அப்பழுக்கற்ற பொதுவாழ்வும், மக்கள் சேவையும், மகத்தான தியாகமும் கொண்ட என். சங்கரய்யா போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கையும் வரலாறும் மக்கள் மத்தியில் முன்னிறுத்தப்பட வேண்டும்
Comments