எர்னஸ்ட் ஹெமிங்வே பிறந்த தினம் இன்று .

 

 


ஜூலை 21 எர்னஸ்ட் ஹெமிங்வே பிறந்த தினம் இன்று .

📝 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் சிறந்த பத்திரிகையாளருமான எர்னஸ்ட் ஹெமிங்வே 1899 ஆம் ஆண்டு ஜூலை 21 அமெரிக்காவில் பிறந்தார். இவர் பட்டப்படிப்பு முடித்ததும், 'கான்சாஸ் சிட்டி ஸ்டார். என்ற பத்திரிகையில் பணிபுரிந்தார். முதல் உலகப்போரின்போது இத்தாலி ராணுவத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக பணிபுரிந்தார்.

📝 அதன்பின், சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். எழுதுவதுபோலவே, சாகசச் செயல்களிலும் அதிக நாட்டம் கொண்டவர். எழுதாத நேரங்களில் ஸ்பெயின் நாட்டின் காளைச் சண்டை, புளோரிடாவில் ஆழ்கடல் மீன்பிடிப்பு போன்ற பல சாகச செயல்களில் ஈடுபட்டார். 2ஆம் உலகப்போரின்போது, போர்முனை செய்தியாளராகப் பணிபுரிந்தார்;. 'தி ஓல்ட் மேன் அண்ட் தி ஸீ" நாவலை 1951இல் எழுதி உலகப் புகழ் பெற்றார். இதற்கு புலிட்சர்விருது கிடைத்தது. இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1954-ல் பெற்றார்
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,