இந்திய தேசீயக் கோடி
-
இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ண கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று அங்கீகரிக்கப்பட்ட நமது இந்திய நாட்டின் கொடியாகும். இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா. காங்கிரஸ் கட்சிக் கோடியில் சிறிதே மாற்றம் செய்து இந்திய தேசீயக் கொடியினை அவர் வடிவமைத்துள்ளார். நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும்.காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. எனவே அனைத்து மதங்களையும் உள்ளடக்கியதே நமது இந்தியா என்பதை இந்திய தேசீயக் கோடி உணர்த்துகிறது.
Comments