திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan, பிறந்த நாள்
இன்று திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan, பிறந்த நாள்: ஜூலை 3, 1942 இவர் கேரளத்தை சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
இவருடைய கலைப் பணிகளுக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது 1983ஆம் ஆண்டிலும் பத்ம விபூசன் விருது 2006 லும் இவருக்கு வழங்கப்பட்டன.
Comments