மருத்துவர் தின வாழ்த்துகள்
மருத்துவர் தின வாழ்த்துகள் 🙏
Frontline Warriors
*
இதயம் துடிக்கிறது
அதற்கு யாரும் தினசரி நன்றி சொல்வதில்லை.
ரத்த ஓட்டம் நிகழ்கிறது அதற்கு எவரும்
ஒவ்வொரு நாளும் வணக்கம் சொல்வதில்லை .
சுவாசம் நடக்கிறது அதனை யாரும் நொடிதோறும் தொழுவதில்லை.
ஒவ்வொரு உறுப்பும் உயிரின் இயக்கத்திற்கு ஆதாரமாகத்தான் இருக்கிறது
அவை எல்லாவற்றையும் நாம் ஒவ்வொரு நிமிடமும் நன்றியோடு சிந்திப்பதில்லை .
ஆனால் இவற்றில் ஏதாவது ஒன்று
சிறு வேலை நிறுத்தம் செய்தாலும் கூட
உடனே நாம் நாடுவது ஒரு மருத்துவரைத்தான்.
'டாக்டர் எப்படியாவது இந்த உசுர காப்பாத்திருங்க... '
என்று ஒவ்வொரு நாளும்
எங்காவது ஒரு குரல்
கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறது .
மருத்துவமனைகள் ஆலயமாகும் கணம் அது.
'டாக்டர் நீங்க கடவுள் மாதிரி ... ' என்று ஏதாவது ஒரு இதயம் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது.
மனிதன் தெய்வமாகும் தருணம் அது.
'முன்படை வீரர்கள்' என்று கொரோனா காலத்தில் போற்றப்பட்டவர்கள் போற்றப்படுபவர்கள் மருத்துவர்கள்.
அவர்களுக்கு ஒரு நாள்
நாம் நன்றி சொல்லும் நாள்.
அது இந்நாள்.
மருத்துவர்கள் நாளான இன்று உலகெங்கும் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றும் மருத்துவர்கள் அனைவரையும் வணங்குகிறேன்...🙏
வாழ்த்துகிறேன் 💐
பிருந்தா சாரதி
*
#DoctorsDay #frontlinewarriors
Comments