நடிகர்வெண்ணிறஆடைமூர்த்தி


 பிறந்தநாள்வாழ்த்துப்பதிவு 🌹🌹

#நடிகர்வெண்ணிறஆடைமூர்த்தி🌹


              🌹🌹நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் வழக்கறிஞர் பணி செய்து வந்தார். தந்தையைப் போலவே வழக்கறிஞருக்குப் படித்தவர்.


              இவருக்கு ஜோதிடம் பார்த்த ஒருவர் வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள் வழக்கறிஞருக்கு படித்திருந்தாலும் முழு நேரத் தொழிலாக அது அமையாது என்று ஜோதிடம் கூறி அது பலித்து விடவே  ஆர்வம் ஏற்பட்டு ஜோதிடத்தில்  PHD வரை படித்துள்ளார்.


          வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் இயக்கத்தில் 1965ல் வெளிவந்த வெண்ணிற ஆடை படம் மூலம் நடிகராக அறிமுகமானார். 


         நடிகர்திலகம், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல், ரஜினி, சிவக்குமார், இளையதிலகம் பிரபு, விஜயகாந்த், ஆர்யா என அனைத்து நடிஙர்களுடனும் மொத்தம் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 


          நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள் 1975ல் நடிகர் கமல் நடித்த மாலை சூடவா படத்தின் கதாசிரியர் இவரே. 


          இவரது நடிப்பில் மிரிண்டா மீண்டும் மீண்டும் சிரிப்பு தொடர்ந்து 11 வருடங்கள் சன் டிவியில் ஒளிபரப்பானது.


            பெரிய இடத்துப் பெண் படத்தில் கட்டோடு குழலாட ஆட பாடல், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் கடவுள்ளமே பாடலுக்கு நடித்தவர் மற்றும் சிந்து பைரவி படத்தில் நடிகை சுகாசினி அவர்களின் தாயாராக நடித்த மணிமாலா அவர்கள் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள் மனைவியாவார்.


          இவருடைய ஒரு மகன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

            #நடிகர்வெண்ணிறஆடைமூர்த்தி அவர்களுக்கு #mukthafilms60குழு சார்பில் இன்று 86ம் ஆண்டு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்



அனந்தகிரிஷ்ணன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,