முதல் தமிழ் விடுதலை போராட்ட வீரர் அழகு முத்து கோன்.

 ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழ் விடுதலை போராட்ட வீரர் அழகு முத்து கோன். இவரது வரலாறு மற்றும் விடுதலை போராட்டம் பற்றி தமிழர்களுக்கே கூட சரிவர தெரியாது.


ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாளர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தவர் கட்டாலங்குளம் அரசரான வீரர் அழகு முத்து கோன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேய படைத்தளபதியான யூசுப்கான் சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு அதில் வீரன் அழகுமுத்து கோன் மற்றும் 6 படைத் தளபதிகளும் மற்றும் 248 போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு இறந்தனர். பீரங்கி முன் நின்ற சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவன் இவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அழகுமுத்து கோனின் வரலாற்றில் அவருடைய பிறந்த தினம் குறிப்பிடப்படவில்லை.

இன்றும் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களால் இன்றைய தினம் அழகுமுத்து கோனுக்கு குருபூஜை விழா நடத்தப்படுகிறது  எனவே இன்றைய தினத்தை (ஜூலை 11 , 1710) அவரது பிறந்த நாளாகக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,