கேப்டன் லட்சுமி நினைவு நாள்

 



இன்று ஜூலை 23, 2012 கேப்டன் லட்சுமி நினைவு நாள். லட்சுமி செகல், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றவர்

லட்சுமி  மருத்துவராகி, காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாகி, பின்னர் கேப்டன் லட்சுமியாக ஆயுதமேந்தி, இறுதி நாட்களில் தோழர் லட்சுமியாக மார்க்சிய பரிணாம வளர்ச்சியடைந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சிராணி படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர். 1940ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு மருத்துவ பணிக்காக சென்ற லட்சுமி, நேதாஜியை சந்தித்தபின்னர் 1943ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்தார்  நேதாஜியின் ‘ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சர்; அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்தவர்; சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டோர், போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டோருக்கு, மருத்துவ உதவிகளை வழங்கினார். இவருடைய மகள் சுபாஷினி அலி சி.பி.எம்.மின் மத்தியக் குழு உறுப்பினர்; குடியரசுத் தலைவர் தேர்தலில் லட்சுமி எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகஅப்துல்கலாமை எதிர்த்து ப் போட்டியிட்டவர்; இந்திய அரசு பத்மபூஷண் விருது கொடுத்து இவரைக் கௌரவித்துள்ளது

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு