ஜார்ஜ் பெர்னாட்ஷா பிறந்த நாள்


 உலகறிந்த ஆங்கில இலக்கியவாதியான ஜார்ஜ் பெர்னாட்ஷா பிறந்த நாள் இன்று - 1856-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் நாள் அயர்லாந்தின் டப்லின் (Dublin) நகரில் பிறந்தார். அவர் 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். அனேகமாக அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும் படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் அவரது எழுத்துக்களில் காணலாம். 

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே.

அறிவில் ஆதவனாகத் திகழ்ந்த பெர்னாட்ஷா அவர்கள் என்றென்றும் ஆங்கில இலக்கிய உலகில் விடிவெள்ளியாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,