மும்பை நகரில் தொடர் குண்டுவெடிப்பு.

 வரலாற்றில் இன்று ஜூலை 11, 2006: மும்பை நகரில் தொடர் குண்டுவெடிப்பு. மேற்கு மும்பையில் அடுத்தடுத்து எழு ரயில்களில் எட்டு குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன... 8 குண்டுவெடிப்புகளும் 11 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டன. ஒவ்வொரு குண்டும் 8 முதல் 10 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்தக் குண்டுகள் அனைத்தும் பயணிகள் இருக்கை கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. குண்டுகள் வெடித்த வேகத்தில் அந்தந்த ரெயில் பெட்டிகள் நொறுங்கிச் சிதறின. இவ்வெடி விபத்துகளில் 209 பேர் பலியாயினர் 817 பேர் படுகாயமடைந்தனர்.. – 

இந்தியன் முஜாஹிதீன் என்கிற தீவிரவாத அமைப்பு இக்குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக உளவுத்துறை நிறுவனங்கள் கூறின. பல கைது நடவடிக்கைகளும் நடந்தன.

இந்த வழக்கு விசாரணை, மும்பையில் உள்ள தடா நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவில் தடா நீதிமன்றம், 100 பேரை குற்றவாளியாக அறிவித்து, 12 பேருக்கு மரணதண்டனையும், ஆயுத சட்டத்தின் கீழ் இந்தி நடிகர் சஞ்சத் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது. 

மேல் முறையீட்டின்போது இக்குண்டுவெடிப்புகளின் மூளையாக செயல்பட்ட யாகூப் அப்துல் ரஸா என்ற தீவிரவாதிக்கு மட்டும் தூக்குத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது 10 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,