குரு பூர்ணிமா தினமின்று

 குரு பூர்ணிமா தினமின்று!🙏



குரு பூர்ணிமா என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதமும் வரும் பெளர்ணமி திதியை குரு பூர்ணிமா என கொண்டாடப்படுகின்றது.

இது எப்படி வந்தது என்பது குறித்து புராண கதைகள் பலவுண்டு..


ஆனால் மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். பிறப்பை கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவை கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தை பார்க்கலாம் என்பதற்காக தெய்வத்திற்கு முன் குருவை வைத்து இப்படி வரிசைப் படுத்தினார்கள்.அப்பேற்பட்ட குருவை வணங்கும் விதமாக “குரு பூர்ணிமா” கொண்டாடப்படுகிறது. இப்படி குருவுக்கெல்லாம் குருவாக இருக்கும் வியாசர், தட்சிணா மூர்த்தி, முருகப் பெருமான் என குருக்களை வழிபடுவது வழக்கம்.


அட்சய திருதியை போன்ற தினம், தங்கம் விற்பனை ஆக வேண்டும் என்பதற்காக வியாபார நோக்கில் பிரபலப்படுத்தப்பட்டுள்ளன. தங்கம் வாங்குவதை தவிர்த்து பல்வேறு முக்கிய அம்சங்கள் அட்சய திருதியை தினத்தில் செய்யலாம்.ஆனால் குரு பூர்ணிமா குருவை நினைக்ககூடிய தினம் என்பதால் அதை யாரும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது வேதனை.


குரு பூர்ணிமா தினத்தில் நமக்கு பாடம் கற்றுக் கொடுத்த குருவை நாம் மனதார நினைத்தலும், கோயிலுக்கு சென்று வணங்குவதும் நல்லது. தற்போது நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் தினம் போலவே, காலம் காலமாக குருவை நினைக்கும் வகையில், தான் கற்று வெளியேறிய பிறகும் தன்னுடைய குருவை நினைக்க வேண்டும் என்பதற்காக பின்பற்றப்பட்டு வந்த தினம் தான் குரு பூர்ணிமா என்பதால், இன்று குறைந்த பட்சம் நம் குருவை நினைக்கவாவது செய்யலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,