பி ஆர் பந்துலு அவர்களின் பிறந்த தினம்.
இன்று தென்னிந்தியாவைச் சேர்ந்த பழம்பெரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான.பி ஆர் பந்துலு அவர்களின் பிறந்த தினம்.
#பிறப்பு : ஜூலை 26, 1910
#மறைவு : அக்டோபர் 08, 1974
பி.ஆர்.பந்துலு. தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, பலே பாண்டியா, ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, தேடிவந்த மாப்பிள்ளை உள்பட பல பிரமாண்ட படங்களை இயக்கியவர், கன்னடத்தில் இன்றைக்கும் போற்றப்படு, கிட்டூர் சென்னம்மா, கிருஷ்ண தேவராயா, ஸ்கூல் மாஸ்டர் படங்களையும் இயக்கியவர். 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர்.பி.ஆர்.பந்துலு
., பி.ஆர்.பந்தலுவின் தனித்த அடையாளத்தை வெளிப்படுத்திய படம், 1959ல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன்.
காட்சியமைப்புகளாலும் வசனங்களாலும் இன்றளவும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதுமே நம் கண்முன்னே நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான் தோன்றுவார். கட்டபொம்மன் வரலாறு குறித்த சர்ச்சைகள் இருந்தாலும், வெள்ளையனை எதிர்த்து நின்று தூக்குக் கயிற்றை முத்தமிட்ட அந்த மாவீரனின் தியாகத்தைத் தமிழகத்தில் உள்ள பாமர மக்களுக்கும் அறிமுகம் செய்தவர் பி.ஆர்.பந்தலுதான்.
Comments