சிம்லா ஒப்பந்தம்
வரலாற்றில் இன்று ஜூலை 2 - சிம்லா ஒப்பந்தம் (Simla Agreement)வங்காளதேச விடுதலைப் போரினைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே ராஜதந்திர நல்லுறவைகளை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத் தலைநகரான சிம்லாவில் இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே சூலை 2, 1972 இல் கையெழுத்தானது. இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் பாகிஸ்தான் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டொவும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சிம்லா ஒப்பந்தத்தின் விளைவாக இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருந்த சிபிணக்கு, மனக்கசப்புகள் மற்றும் காஷ்மீர் குறித்தான சர்ச்சைகள் முடிவுற்று இருதரப்பு நல்லுறவுகள் மேம்பட வழிவகுத்தது. இந்த ஒப்பந்தம், காஷ்மீர் விவகாரத்தில்,இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும் பேசி தீர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் மூன்றாவது நாடு தலையீடு கூடாது என்றும் இந்த ஒப்பந்தம் கூறுகிறது
Comments