குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு ஸ்காட்லாந்தில் சோதனை
வரலாற்றில் இன்று -1996 ஜூலை 5ம் தேதி – குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு ஸ்காட்லாந்தில் சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்டு பிறந்தது. டோலியை குளோனிங் செய்ய மற்றொரு ஆட்டின் பால்மடிச்சுரப்பி இருந்து எடுக்கப்பட்ட செல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், உடலின் எந்த பகிதியிலிருந்து எடுக்கப்பட்ட செல்லிலிருந்தும் அந்த உயிரியை முழுவதுமாக குளோனிங் முறையினால் உருவாக்க முடியும் என நிரூபிக்கப்பட்டது.
அதனை அடுத்து பல விலங்குகள் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டன .இதே முறையில் மனிதர்களையும் உருவாக்க முடியும் என்றாலும் அது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
Comments