அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
ஜூலை 24 1985 சென்னை மூர்மார்கெட் அருகில் அமைக்கப்பட்டிருந்த மிருக காட்சி சாலை விரிவாக்க முடியாது இடப்பற்றாக்குறை காரணமாக அது சென்னைக்கு வெளியே வண்டலூரில் பர ந்து விரிந்த மைதானத்தில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்ற பெயரில் மாற்றப்பட்டு திறந்துவைக்கப்பட்டது
• இந்தியாவில் உள்ள நவீன முறையில் அறிவியல் அடிப்படையில் பராமரிக்கப்படும் மிகச்சில உயிரியல் பூங்காக்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முதன்மையாக சிறந்து விளங்குகிறது.
• வண்டலூர் பூங்கா, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது. 1,265 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில், 170 வகையிலான 2200 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.
• பாலூட்டிகள் 430, பறவைகள் 534, ஊர்வன 351, நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை 72, மீன்வகைகள் 265 என்ற எண்ணிக்கையில் உள்ளன.
.
• பரந்து விரிந்திருக்கும் இந்தப் பூங்காவை நடந்து சென்று பார்க்க இயலாதவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பேட்டரி கார் வசதியும் உண்டு.
Comments