ஜூஸபி கரிபால்டி பிறந்த நாள்
இன்று, நவீன இத்தாலியின் தந்தை (1807-1882) ஜூஸபி கரிபால்டி பிறந்த நாள் ஜூலை 4, 1807
கரிபால்டி (ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கியவர். இத்தாலியின் பகுதிகள் ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பிடியில் அடிமைப்பட்டு கிடந்தன இத்தாலிய விடுதலைக்காக இவர் உருவாக்கிய ரகசிய தொண்டர்படை புகழ் பெற்றது. இத்தாலியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சி செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்
14 ஆண்டுகள் அந்நிய தேசத்தில் ஒரு விவசாயத் தொழிலாளியாக வாழ்ந்தார். இவர் இந்த நாட்களில் தனது புரட்சியின் வேகத்தை இழந்திருப்பார். ஒரு சராசரி மனிதராக மாறி இருப்பார் என்று உலகம் எதிர்பார்த்தது. ஆனால் அந்த பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தையும் தாண்டி இத்தாலியில் புரட்சிக்கான காலம் கனிந்தபோது மீண்டும் வந்து புரட்சிகள் செய்து வெற்றி பெற்றார், அந்த கர்மவீரர்.
[
Comments