விடுதலைப் போராட்ட வீரர் கல்பனா தத்தா பிறந்த தினம் இன்று

 


ஜூலை 17. விடுதலைப் போராட்ட வீரர்

கல்பனா தத்தா பிறந்த தினம் இன்று(1914).

இந்திய விடுதலைக்காக, புரட்சி

போராட்டங்களில் ஈடுபட்ட பெண்களில்

கல்பனா தத்தா முக்கியமானவர். முன்னர்

கிழக்கு வங்காளம் என அழைக்கப்பட்ட,

தற்போதைய வங்கதேச நாட்டின் சிட்டகாங்

நகருக்கு அருகேயுள்ள சிர்பூர் என்ற

ஊரில், வினோதவிஹாரி தத்தா --

கோபனா தேவி தம்பதிக்கு மகளாக

பிறந்தார்.

ஜுகந்தர் புரட்சி இயக்கத்தில்

இணைந்து, இந்திய விடுதலைப்

போராட்டத்தில் பங்கேற்றார்.

புரட்சியாளர் சூர்யா சென், கல்பனா தத்தா

உட்பட, 65 புரட்சியாளர்கள், சிட்டகாங்கில்

இருந்த, ஆங்கிலேய அரசின் போர்

தளவாடங்களை கைப்பற்றினர். ஆயுத

கிடங்கில், இந்திய தேசிய கொடியை

ஏற்றி, ஜலாலாபாத் மலைப்பகுதிக்குள்

தப்பிச் சென்றனர்.

சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல்

வழக்கில், கல்பனாவை, நாடு கடத்த

உத்தரவிடப்பட்டது.

காந்தியடிகளின் தீவிர

முயற்சியால், கல்பனா விடுதலை

செய்யப்பட்டார். பின், பொதுவுடைமைக்

கட்சியின் பொதுச் செயலர்

பி.சி.ஜோஷியை, திருமணம் செய்து

கொண்டார்.

1995 பிப்ரவரி 8ஆம் தேதி காலமானார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,