ஆடி ஆதிரை விழா
ஆடி ஆதிரை விழா
=============================
சூர்ய குலத்தில் பிறந்த சோழ மன்னன், ராஜராஜ சோழனின் சேனைத் தலைவன், தெற்காசியாவையே தன் விரலசைவில் வைத்திருந்த நாயகன், தோல்வியே கண்டிராத சோழ மாமன்னன், தந்தையை மிஞ்சிய தனயன் ராஜேந்திர சோழனுக்கு ஆடி ஆதிரை விழா இனிதே நடந்து முடிந்தது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளில் விழாக்கோலம் பூண்டது. இந்த நிகழ்வில் சோழர்களின் இன்றைய வாரிசுகளான பிச்சாவரம் பாளையக்காரர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்து முடிந்தது.
கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் விழாவினை சீரும் சிறப்புமாக முன்னின்று நடத்திய அண்ணன் Manijayaram அவர்களுக்கும் மஹரிஷி ஜம்பு ஆன்மிக சபாவினர் மற்றும் கொட்டும் மழையில் கடும் சிரமத்திற்கு நடுவே விழாவினை சிரமேற்கொண்டு நடத்தி கொடுத்த விழாக்குழுவினர் & ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
நாகரத்தினம் சாம்பசிவம் வல்லத்தரையர்
Comments