சிகரம் தொடும் தமிழன் ஷிவ் நாடார்

 சிகரம் தொடும் தமிழன் ஷிவ் நாடார் பிறந்த தினம் இன்று(1945).

1945ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள “மூலைபொழி” என்ற கிராமத்தில், சிவசுப்ரமணி நாடார் என்பவருக்கும், வாமசுந்தரி தேவிக்கும் மகனாக ஷிவ் நாடார் பிறந்தார்.

1968ஆம் ஆண்டு டெல்லி 

டி.சி.எம் லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், ஷிவ் நாடார் சுயமாகத் தொழில் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். எனவே, தன்னுடன் பணிபுரியும் ஆறு சகப் பணியாளர்களுடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.

1970ஆம் ஆண்டு, ஐ.பி.எம் இந்தியாவிலிருந்து வெளியேறும்போது, ஷிவ் நாடார் தன்னுடைய “எச்.சி.எல்” நிறுவனத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். 1982ஆம் ஆண்டு, எச்.சி.எல் நிறுவனத்தின் முதல் கணினி வெளியிடப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில், எச்.சி.எல் கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்களின் வருவாய் 80% பெருகியுள்ளது. எச்.சி.எல் நிறுவனத்தின் படைப்புகள், இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என கூறலாம். 1980ஆம் ஆண்டில், எச்.சி.எல், ஐ.டி மென்பொருள் விற்க சிங்கப்பூர் மற்றும் தூரக் கிழக்குக் கணினி நிறுவனத்தை திறக்க சர்வதேச சந்தையில் முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்தினார்.

தொழில்துறையில் மட்டும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல், பொது பணியிலும் தன்னால் முடிந்த பணிகளை செய்துவருகிறார். 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷிவ் நாடார், அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கற்க உதவிகள் செய்து வருகிறார். 1996இல் தனது தந்தையின் பெயரில் ‘எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியை’ சென்னையில் நிறுவினார்.

2011–ல் கரக்பூரில் உள்ள “இந்திய தொழில்நுட்ப கழக” குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய வாழ்க்கையில், சரியான பாதையை தேர்தெடுத்து, மிக விரைவில் இலக்கினை அடைந்து, குறுகிய காலத்திற்குள் ஷிவ் நாடார் தனது கடின உழைப்பால் புகழின் உச்சியை அடைந்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,