முஹம்மது நபி நபித்துவம்
வரலாற்றில் இன்று ஜூலை 16, 622 - முஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர்ருடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார். என்று அவருடைய வரலாறு சொல்கிறது முஹம்மது நபி வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதிய இப்னு இஷாக், இந்த நிகழ்வை ஓர் ஆன்மீக அனுபவமாக . குறிப்பிடுகிறார். முஹம்மது நபியின் போதனைகளுக்கு மக்கா நகரில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக அவர் மக்காவை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட கி.பி. 622ம் வருடம் இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது. மக்காவில் இருந்து மதீனா வந்த பின்னர் பத்து வருடங்கள் கழித்து முகம்மது நபி தமது இறுதி ஹஜ் கடமையை மக்காவிற்கு சென்று நிறைவேற்றியப் பின்னர் மீண்டும் மதீனா திரும்பினார். அங்கு தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.
Comments