டாக்டர். அப்துல் கலாம் நினைவு நாள் இன்று

 டாக்டர். அப்துல் கலாம் நினைவு நாள்   இன்று💐

✈ ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்ற இயர்பெயர் கொண்ட கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியில் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் பிறந்தார்.🌹


✈ சென்னையில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானு}ர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். சூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். அவர் இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களித்தார். சோதனை கட்டத்தில் கலாம், ஆர். சிதம்பரத்துடன் சேர்ந்து தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.. 2002-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 922,884 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற முதல் விஞ்ஞானி இவர்.🌹 குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்

✈ இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்பட்ட.   2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். 

இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 சூலை மாதம் 30ஆம் தேதி, மேற்கொள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,