இந்தியாவின் பறவை மனிதர் என்று அறியப்பட்ட சலீம் அலி,

 


இன்று இந்தியாவின் பறவை மனிதர் என்று அறியப்பட்ட சலீம் அலி, நினைவு நாள். (ஜூலை 27, 1987). சலீம் அலி உலகப்புகழ் பெற்ற இயற்கையியல் அறிஞர், பறவையியல் வல்லுநர் மற்றும் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர். இந்தியப் பறவைகள் குறித்தான அவரது ஆராய்ச்சி தொடர்பாக அவர் காஷ்மீர் முதல் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் வனப்பகுதிகளுக்குள்ளும் பயணித்து ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

தமிழ் நாட்டில் உள்ள மலைகளின் அரசியாகப் போற்றப்படும் நீலகிரி மலைக்காடுகளுக்கு 1932 ஆம் ஆண்டு வருகை தந்து, பறவைகள் பற்றிய ஆராய்ச்சியில் சலீம் அலி ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை. பறவையியல் துறையில் அவரது அயராத உழைப்பும், தளராத ஊக்கமும், வருங்கால ஆய்வாளர்களுக்குப் புது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி