மேரி கியூரி அம்மையார் நினைவு நாள்
: வரலாற்றில் இன்று - புற்று நோயை குணப்படுத்தும் ரேடியத்தை கண்டுபித்த மேரி கியூரி அம்மையார் நினைவு நாள் இன்று. (ஜூலை 4, 1934)
ரேடியம், பொலோனியம் ஆகிய தனிமங்களைக் கண்டுபிடித்து, ரேடியத்தை தனியே பிரித்தெடுத்து, அதன் பண்புகளை ஆராய்ந்ததுக்கான கௌரவமாக, 1911ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார் மேரி க்யூரி. நோபல் பரிசு பெற்ற முதல் பெண், இயற்பியல், வேதியியல் என இரு வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர், இரண்டு நோபல் பரிசுகளை பெற்ற முதல் நபர் போன்ற சிறப்புகள் மேரிக்குச் சொந்தம். மனித இனம், மேரி க்யூரிக்கும் அவரின் கண்டுபிடிப்புகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டது!
Comments