தமிழ் நவீன கவிதையின் முகமாகத் திகழ்ந்த கவிஞர் ஞானக்கூத்தன் நினைவு நாள்

 ஜூலை 27 – 2016 இன்று தமிழ் நவீன கவிதையின் முகமாகத் திகழ்ந்த கவிஞர் ஞானக்கூத்தன் நினைவு நாள்


1938ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்த ஞானக்கூத்தனின் இயற்பெயர் அரங்கநாதன். 1956ஆம் ஆண்டு இவர் எழுதிய துர்க்கையம்மனுக்குத் தோத்திரங்கள் என்று பக்தி நூல் வெளியானது. அதற்குப் பிறகு. 1968ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு சிற்றிதழ்களில் கவிதைகள் எழுத ஆரம்பித்ததார். ழ, கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களிலும் பங்குவகித்தவர் ஞானக்கூத்தன். இவர் 'மையம்', 'விருட்சம்' (தற்போது நவீன விருட்சம்), மற்றும் 'கணையாழி' பத்திரிகைகளில் பங்களித்திருக்கிறார்

அன்று வேறு கிழமை, சூரியனுக்குப் பின்பக்கம், கடற்கரையில் சில மரங்கள், ஞானக்கூத்தன் கவிதைகள் மற்றும் என் உளம் நிற்றி நீ ஆகிய கவிதைத் தொகுப்புகள் ஞானக்கூத்தன் எழுதி வெளிவந்திருக்கின்றன.

2004ஆம் ஆண்டு விளக்கு விருதும் 2010ஆம் ஆண்டு சாரல் விருதும் 2014ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதும் ஞானக்கூத்தனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. கவிஞர் ஞானக்கூத்தன் 2016 ஜூலை 27 புதன்கிழமை தனது 77வது அகவையில் சென்னையில் காலமானார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,