பிரெஞ்சு எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமா்
வரலாற்றில் இன்று.
பிரெஞ்சு எழுத்தாளர்
அலெக்சாண்டர் டூமா் 1802 ஜூலை 24-ல் பிறந்தார்.
அவர்தான் இன்றுவரை ‘உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர்’ என்று அழைக்கப்படுகிறார். அவரது சாகசமிக்க வரலாற்றுப் புதினங்களுக்காக உலகெங்கும் படிக்கப்படுகின்ற ஓர் பிரெஞ்சு எழுத்தாளர் ஆவார். த கௌன்ட் டெ மான்டி கிரிஸ்டோ, த த்ரீ மஸ்கிடீர்ஸ், ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர், த வைகௌன்ட் டெ ப்ராக்லோன் உட்பட அவரது பல புதினங்கள் துவக்கத்தில் தொடர்கதைகளாக வெளிவந்தவை. நாடகங்களும் இதழ்களில் கட்டுரைகளும் ஆசிரியருக்குக் கடிதங்களும் எழுதி வந்தார்.
உலகில் எந்த எழுத்தாளனும் சம்பாதிக்காத அளவுக்கு எழுத்தின் மூலம் சம்பாதித்தவர் இவர்தான் என்றும் குறிப்பிடப்படுகிறது.
‘கலையின் சிகரம்’ என்று பெர்னாட்சாவினால் அழைக்கப்பட்ட டூமாஸ்;
கரிபால்டியின் நண்பனாகத் திகழ்ந்த டூமோ்,
எழுதிக்குவித்த டூமாஸ்;
எழுத்தின் வழியாக பெரும் பணம் சம்பாதித்த டூமாஸ்;
1870 டிசம்பர் 5ல் இந்த உலகை விட்டு மறைந்தார்.
Comments