உலக பாம்புகள் தினம் இன்று.
உலக பாம்புகள் தினம் இன்று... ஜூலை 16
உலகில் கிட்டத்தட்ட 3000 வகையான பாம்பு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன கண்டறியப்படாதது இன்னும் எத்தனையோ எனத் தெரியாது!...
வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பாம்புகளும் ஆந்தைகள் போன்று எலிக்கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகித்து உணவுச்சங்கிலியில் முக்கிய இடத்தில் உள்ளதால் பாம்புகளைப் பாதுகாப்போம்...
Comments