அனைத்துலக சதுரங்க நாள்

 


இன்று ஜூலை 20 அனைத்துலக சதுரங்க நாள் (International chess day) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) வழிகாட்டலின் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. சதுரங்கம் அதிர்ஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு.பல விதமான சதுரங்க விளையாட்டுகளும், அதனுடன் தொடர்புடைய சில விளையாட்டுகளும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன. 

         செஸ் ஒலிம்பியாட் எனப்படும் உலக சதுரங்க சாம்பியன் விளையாட்டு போட்டி இந்த ஆண்டு சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் ஜூலை 27 துவங்கி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தகுந்தது



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி