மெல்லிசைசக்ரவர்த்தி வி.குமார்
இன்று மெல்லிசைசக்ரவர்த்தி என புகழப்பட்ட பழம் பெரும் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் .வி.குமார் அவர்களின் பிறந்த நாள். இவரது இசையமைப்பு சமகாலத்தில் இசையமைத்து வந்த எம். எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் போன்றோரின் இசையமைப்பிலிருந்து மாறுபட்ட மெல்லிசையாக காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்தேய இசைக்கருவிகளை கலந்து பயன்படுத்தினார்.
இவர் தொடர்ச்சியாக பல கே.பாலச்சந்தர் அவர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து
வந்தார். *புன்னகை மன்னன் பூ விழிக்கண்ணன் ருக்மணிக்காக,
*ஆடி அடங்கும் வாழ்க்கையடா,
*மூத்தவள் நீ கொடுத்தாய்" ...
இப்படி அற்புதமான மெட்டுக்களை
அளித்து 60 களின் திரையிசையை மெருகேற்றியவர்களில் வி. குமார் முக்கியமானவர்.
பாலச்சந்தர் அவர்களின் வேறுபட்ட கதைகளுக்குத் தன் தனித்துவமான இசையைக் கொடுத்தவர்.மெல்லிசை இழையோட இவர் வாத்தியங்களைக் கையாளும் பாங்கு மிகவும் அற்புதமானது. உதாரணங்களாக, "மதனோற்சவம்" பாடலில் வரும் கிடார் இசையும், "உன்னிடம் மயங்குகிறேன்" பாடலில் வரும் பியானோ இசையையும் சொல்லலாம்.
எண்ணிக்கையில் குறைவான படங்களாக இருந்தாலும் மெல்லிசைக்காலத்தின்
இனிய நினைவுகளில் தங்கியுள்ளார்,
Comments