பழங்குடி மக்கள் உரிமை போராளி ஸ்டேன்ஸ் சாமி முதலாம் ஆண்டு நினைவு நாள்
: ஜூலை 5, பழங்குடி மக்கள் உரிமை போராளி ஸ்டேன்ஸ் சாமி முதலாம் ஆண்டு நினைவு நாள். இந்திய ரோமன் கத்தோலிக்க பாதிரியார். திருச்சி மாவட்டம் வீரகனூரில் பிறந்தவர் இவர் இயேசு சபயைச் சேர்ந்தவர். பல தசாப்தங்களாக பழங்குடியின உரிமை செயற்பாட்டாளராக இயங்கிவந்தார். சுவாமி 1975 முதல் 1986 வரை பெங்களூரில் உள்ள ஜேசுயிட் நடத்தும் இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தாமல் இருப்பது குறித்து இவர் கேள்வி எழுப்பியுள்ளார், இதன்படி பழங்குடிகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு, மேம்பாட்டுக்காக பழங்குடியினரை உறுப்பினர்களாகக் கொண்ட `பழங்குடியினர் ஆலோசனைக் குழு’ அமைக்க வேண்டும் என்று ஸ்டேன் சுவாமி குரல்கொடுத்தார். தொடர்ந்து இந்துத்துவ தீவிரவாதிகளின் வெறுப்புக்கு ஆளான 83 வயதான ஸ்டேன் சுவாமி, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார். 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவின், பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் வரிசையாக குற்றங்கள் சுமத்தப்பட்டன. ஆனால் ஏன் தேசத் துரோக வழக்கு பாய்ந்தது என்பது பெரிய கேள்வி. உடல்நிலைப் பாதிக்கப்பட்டு சிறையில் இருந்தார். உரிய சிகிச்சை மறுக்கப்பட்டது. முன்பு ஒடிசாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை எரித்துக்கொன்ற அதே கூட்டம் ஸ்டேன்சாமி பாதிரியாரை காவலில் வைத்து கொன்றது பாசிச மோடி அரசின் அடக்குமுறையால் நிகழ்ந்த கொடிய மரணம். பாதிரியார் ஸ்டேன் சாமி அவர்களுக்கு வீர வணக்கம்.
Comments