பேசும் புத்தகங்கள்/நிலாக்கள் மிதக்கும் தேநீர்
இது நான் விமர்சனம் செய்யும் புத்தகங்களுக்கு தலைப்பு
இன்றைய
புத்தக விமர்சனம்
நிலாக்கள் மிதக்கும் தேநீர்
Moons Floating Tea
கவிதை படைப்பு :அன்புத் தோழி ஜெயஸ்ரீ
ஆங்கில மொழியாக்கம்: உஷ்ட்ரா
முதல் பதிப்பு :டிசம்பர் 2021
பக்கம் :96
ஒளியச்சு :வந்தை முருகுபாரதி
முகுப்போவியம் :திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
வெளியீடு :அகநீ வெளியீடு
3. பாட சாலை வீதி. அம்மையப்பட்டு. வந்தாவாசி -பின் கோடு :604408
கைப்பேசி :98426 37637/94443 60421
விலை :ரூ.100/-
கவிஞர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்களின் இந்த கவிதை தொகுப்பிலுள்ள கவிதை களை படித்த போது தேநீரின் சுவை போல என்னிடம் ஒட்டி கொண்டது
ஒரு புதிய உலகம் சென்றது போல் மனதில் பட படப்பு
இவர் தமிழ் கவிதைகளுக்கு ஒரு புதிய நீர்பாய்ச்சி இருக்கிறார் என சொல்வேன்
தமிழ் ஹைக் குவிற்கு இவர் கவிதை கள் புத்தொளி
எளிய சொற்கள் நம்மை வேறு உலகுக்கு அழைத்து செல்லும்
மௌனமே தேநீர்
தேநீரே மௌனம்
உடையும் நீர்க்குமிழிகளைச்
சூடாக்கு
முத்தங்களால்
இப்படி நம்மை உடனே தேநீர் பருக வைக்கும்
தேநீர் தவிர இயற்கையையும்
தன்னுடைய குறுங்கவிதை, ஹைக்கூ. லிமரைக்கூ சென்ரி யூ என நாலாவிதமாக இவரின் கவிதைகளின் வாசத்தை நாம் நுகரமுடிகிறது
விலகிய இயற்கை
இவரின் இயல்பின் பாதை வழிகளில் காணலாம்
மொட்டை மாடியை உரசிப்போகும்
கம்பிகள்
அழைக்கிறது வானம்
மலர்கள் குறைய
இலைகளை ரசிக்க ஆரம்பித்து விடுகிறது
மனம்
நாடோடியின் பூட்டு
நம்மை வேறு ரசனை க்கு கூட்டி செல்லும்
இழந்த காதலை யே
எப்போதும் எழுதி
இருந்த காதலையும் இழந்தான்
ஆம் என நமக்கு ஒரு நமட்டு சிரிப்பு
பட்டேன பிடித்தத்து இந்த கவிதை
அனுப்பிய மோதிரம் பிடிக்கவில்லை
அவனை அணியும்வேட்கையில்
அட டா
காதலித்தவர்களுக்கு புரியும் இது
நதியில் விழும் பெரு மழை
நீச்சல் நிறுத்தி
நிலம் தாவும் தவளை
அட செம கற்பனை
இப்படி நாம இந்த ஹைக்கூக்களின் வழியே சென்று வேறு ஒரு உலகம் பயணிக்கிறோம்
Limerics
என்னை கவர்ந்தது
பரிசாக வந்த நூல்
அளித்தவன் கிழித்த மோகத்திரையில் அறுந்த சிலந்தி நூல்
இந்த கவிதை தொகுப்புக்கு
நாணற் காடன். மு. முருகேஷ் மற்றும் நா. விச்வநாதன் இவர்களின் அணிந்துரை கவிஞருவுக்கு சிறப்பு சேர்த்துள்ளது
நான் மடா தேநீர் குடியன்
இந்த கவிதை எனக்குன்னு எழுதியது போல் உணர்ந்தேன்
மிகப்பிடித்தது தேநீரென்றால்
அதில் மிதக்கும் தனிமையும்
உள் நுழையும் நிறைவும் நானே
ஆம். எனக்கு தனிமை தான் நண்பன்
கவிஞர் அன்புத் தோழி ஜெயஸ்ரீ அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
பல இன்னும் கவிதை களை படைத்து தமிழ் கவிதை உலகுக்கு புத்துயிர் தர வேண்டும்
அருமையான ஆங்கில மொழி பெயர்ப்பு
உ ஷ்ட்ராவின் மிகவும் உற்சாகம் அளிக்கிறது
அவருக்கும் வாழ்த்துக்கள்
அன்புடன்
உமாகாந்த்
Comments